வாழ்வைப் புரிந்துகொள்ள வசதியாக மூன்று பிரிவாகப் பிரித்துக் கொள்வோம்.
செயல்படுதல், பிறருடன் பழகுதல், தனித்திருத்தல் .
சில அல்லது பல நேரங்களில் நாம் நினைப்பது போல நாம் நடந்துகொள்வதில்லை. செயல்படுவதில்லை. இருப்பதில்லை. இதற்குக் காரணமாக நாம் நினைப்பது பெரும்பாலும் நம் சூழ்நிலையைத்தான்.
எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலும் தேர்வுகள் உண்டு. ஒரே ஒரு வாயப்புடன் நாம் ஒடுக்கப்படுவதில்லை. நாம் செயல்படவும், நடந்துகொள்ளவும் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் எப்போதும் உண்டு. அதில் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே நம் மனப்பான்மை, மனப்பாங்கு, ஆளுமை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நாம் அதை மனோபாவம் என்ற சொல்லால் குறிப்பிடுவோம்.
பல சமயம் நாம் தவறாகத் தேர்ந்தெடுக்கிறோம் அல்லது சரியானதை சிந்தித்தாலும் அதைச் செய்யத் தவறுகிறோம்.
ஏன் இப்படி?
புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
இங்கு பகிர்ந்து கொள்ளப்படுவது முழுமை பெற்ற ஒரு மனவியல் கோட்பாடு அல்ல. அனுபவ துவாரத்தில் கசியும் சிறு ஒளிக்கீற்றுகள். பயணிப்போம்.
No comments:
Post a Comment